தியானப் பாடல்கள் | 323-உன்னொரு நாமம் மட்டும் |
உன்னொரு நாமம் மட்டும் ஒரு முறை ஓதுவேனால் என்னகக் கவலையெல்லாம் இருக்குமோ என் இறைவா.... உன்னொரு நாமம் மட்டும் உன்னையே காண வேண்டும் என்று என் கண்களெல்லாம் (2) என்றுமே காத்திருந்தால் கவலையேன் என் இறைவா உன்னை நான் காலமெல்லாம் ஒருமனப் பட்டடைந்தால் (2) என்னதான் குறை எனக்கு இயம்பிடாய் என் இறைவா இன்னுமோ உன்னை விட்டு செல்லுவேன் விந்தை கெட்டு (2) இல்லவே இல்லையையா இனி உனக்காகி விட்டேன் |