Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  322-உன்னைப் பார்க்க நான்  


உன்னைப் பார்க்க நான் துடிக்கின்றேன்
உடன் பேச நான் அழைக்கின்றேன்
வந்து சந்திப்பாயா இறைவா - 2

வழிகாட்டும் உன் மொழி கேட்கின்றேன்
பலிப்பீடம் தவறாது விழைகின்றேன்
வெளிவேடம் கொண்டே நான் வாழ்கின்றேன் - 2
தலைவா நீ என் வாழ்வில் சந்திப்பாயா உன்னை

பாதையில் வறியோர் பார்க்கின்றோம்
வாதையில் துடிப்பதைக் காண்கின்றோம் - 2
வீதியை வெறுத்தே ஒடுகின்றோம்
வீதியில் வந்து நீ சந்திப்பாயா - உன்னை



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்