தியானப் பாடல்கள் | 320-உன்னை நம்பி வாழும்போது |
உன்னை நம்பி வாழும்போது உறுதி பெறுகிறேன் உன் பணியைச் செய்யும் போது நிறைவு காண்கிறேன் உன் வழியில் செல்லும் போது அமைதி காண்கிறேன் இறைவா இறைவா அமைதி காண்கிறேன் நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன் என்னை மட்டும் நம்பும்போது இடறி விழுகிறேன் எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் என்னுள் வாழும் உம்மை நம்பி எழுந்தடி வைக்கின்றேன் இமயமென தடைவரினும் எளிதாய் நடப்பேன் எளிதாய் நடப்பேன் நான் எளிதாய் நடப்பேன் இருளின் சக்தி எந்தன் வாழ்வை பணிய சொல்லுதே இறைவா உன் நினைவு என்னை துணிய சொல்லுதே உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன் என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன் |