Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  319-உன்னை விட்டு விலகுவதில்லை  

உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை (2)
நீ அஞ்சாதே நான் உன்னோடு - 2
நானுன்னை ஒருபோதும்
மறக்கவே மாட்டேன் - நான்

தாய் உன்னை மறந்திட்ட போதும் - நான்
உன்னை விட்டு விலகுவதில்லை (2)
சேயுன்னை மறந்திட்ட போதும் - நான்
உன்னை விட்டு விலகுவதில்லை (2)
நீயென்னை மறந்திட்ட போதும் - 2
நான் உன்னை விட்டு விலகுவதில்லை - 2

ஊரெல்லாம் உன்னைப் பழித்தாலும் - நான்
உன்னை விட்டு விலகுவதில்லை (2)
பாரெல்லாம் உன்னை நகைத்தாலும் - நான்
உன்னை விட்டு விலகுவதில்லை (2)
சீரெல்லாம் உன்னைப் பிரிந்தாலும் - 2
நான் உன்னை விட்டு விலகுவதில்லை - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்