தியானப் பாடல்கள் | 318-உன்னை நினைத்தே |
உன்னை நினைத்தே பாடத்துடித்தேன் உள்ளம் உருகியே பாவில் வடித்தேன் இறைவா இறைவா என்னை மறந்தே வாழ விழைந்தேன் உன்னைச் சார்ந்தே வாழ்வடைந்தேன் - 2 என்னை இழிவாய் நினைத்திருந்தேன் என்றும் குறையில் வாழ்ந்திருந்தேன் விண்ணை மண்ணைப் படைத்த நீயோ என்னை நெஞ்சில் புதைத்து விட்டாய் கண்ணின் மணிபோல் காத்து வந்தாய் விண்ணின் ஒளிபோல் நடத்தி வந்தாய் - 2 ஓடுகின்ற நதியினிலே ஓரத்திலே வளர்ந்துவிட்டேன் ஆடுகின்ற நாணலைப்போல் அடியில்லாமல் வளைந்துவிட்டேன் என்னையணைத்து நிமிர்த்திவிட்டாய் முறியாமல் காத்துவந்தாய் - 2 |