தியானப் பாடல்கள் | 317-உன்னை நான் அழைத்தேன் |
உன்னை நான் அழைத்தேன் உன் பெயரைப் பொறித்தேன் என் பணிக்காக யார் செல்வார் - 2 உன்னை நான் அழைத்தேன் உன் பெயரைப் பொறித்தேன் 2 என் பணிக்காய்த் தேர்ந்தெடுத்தேன் கண்மணியாய் நான் காப்பேன் பணிவிடை பெற அன்று பணிவிடை புரிந்திடவே பணிவிடை பெற அன்று (2) பகிர்வினில் வாழ்ந்திடவே எளியோர்க்கு நற்செய்தி நல்கிடவே சிறைப்பட்டோர் விடுதலை வாழ்வு வாழ்ந்திடவே நோயுற்றோர் நோய் நீங்கி நலம் பெறவே நிறைவாழ்வில் சாட்சியங்கள் பகர்ந்திடவே உன்னைக் கண்டேன் உம்மை கண்டேன் உடனே வா என்றேன் உள்ளம் கண்டேன் உன்னில் கண்டேன் உறவில் வாழ்கின்றேன் துன்பம் சூழ்ந்த போதிலும் உனக்கு துணையாய் நானிருப்பேன் (2) உன் துணையாய் நானிருப்பேன் பணிவிடை பெற அன்று.... எரிகின்ற முட்புதரின் நடுவினிலே என் குரலை உன் காதில் ஒலித்தேனே ஒன்றுமில்லா உள்ளத்தின் ஓரத்திலே ஓராயிரம் திறமைகளை வளர்த்தேனே தீயின் நடுவே நடக்கின்ற போதும் தீமை தீண்டாதே ஆழ்கடலை கடக்கின்றபோதும் ஆபத்து அணுகாதே தாயின் வயிற்றில் உன்னைத் தெரிந்தேன் ஆவியை பொழிந்திட்டேன் (2) தூய ஆவியை பொழிந்திட்டேன் பணிவிடை பெற அன்று..... |