Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  316-உன்னில் அடைக்கலம் தேடி  

உன்னில் அடைக்கலம் தேடி வந்தேன்
இறைவா என்னைக் காத்தருளும் - 2

ஆ...ஆ... ஆ...ஆ...
என்னோடு வாழும் தலைவன் நீரே
நிலையான செல்வமாய் உனை அடைந்தேன் - 2
தூயோர் அணியில் இன்பம் கொள்வேன் - ஆ...ஆ....
தூயோர் அணியில் இன்பம் கொள்வேன்
அனுதினம் உன்னடி திரும்பிடுவேன் - நான்
அனுதினம் உன்னடி திரும்பிடுவேன் - உன்னில்

ஆ...ஆ... ஆ...ஆ...
ஆண்டவர் நீரே என் உரிமைச் சொத்து
அறிவுரை வழங்கும் உனைப் போற்றுவேன் - 2
உன் துணை இருப்பதாற் கலங்கமாட்டேன் - ஆ...ஆ...
உன் துணை இருப்பதாற் கலங்கமாட்டேன்
மகிழ்ச்சியின் துள்ளலில் புகழிசைப்பேன் - நான்
மகிழ்ச்;சியின் துள்ளலில் புகழிசைப்பேன் - உன்னில்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்