தியானப் பாடல்கள் | 315-உன்னிடம் உன்னிடம் இன்று |
உன்னிடம் உன்னிடம் இன்று நான் கொஞ்சம் பேசவேண்டும் என்னிடம் என்னிடம் என்றும் இயேசுவே பேச வேண்டும் உள்ளதை என்னில் உள்ளதை நான் உன்னிடம் சொல்லிடணும் ஆ... நடந்தது கடந்தது பார்த்தது கேட்டது எண்ணத்தில் ஆயிரம் ஆசை வெள்ளம் ஏக்கத்தில் உன்னிடம் உள்ளம் துள்ளும் ஆறுதலே ஆதரவே கானம் நீ என்னுடன் பேசிவிடு மலர்ந்தது மணந்தது மறைந்தது மடிந்தது விரக்தியின் வேதனை சொல்லிடணும் விடியலின் வேந்தனைக் கண்டிடணும் அழகழகாய் அத்தனையும் ஆசையில் உன்னிடம் பகிர்ந்திடணும் |