தியானப் பாடல்கள் | 314-உன் தேவன் உன்னோடு |
உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே ஊரெல்லாம் உன்னை ஒதுக்கினாலும் உன் தேவன் விலகமாட்டார் உன் துக்கங்கள் எல்லாம் மாறும் சந்தோசம் வாழ்வில் கூடும் துயரங்கள் எல்லாம் மறையும் நெஞ்சினில் நிம்மதி நிறையும் பாலை நிலத்தில் மன்னாவைப் பொழிந்த ஆண்டவர் உனக்கு நன்மை செய்வார் அவரின் சமூகம் முன்பாகச் செல்லும் தீமைகள் உன்னை அணுகாது இமயம் போல் சூழ்ந்திடும் துயரங்களை பனிபோல் மறைந்திடச் செய்திடுவார் உலகம் முடியும்வரை உயிருள்ள தேவன் உடனிருப்பார் துணையாக வந்து தோள்மீது சுமந்து தினந்தோறும் உன்னைப் பாதுகாப்பார் காரிருள் சூழ்ந்து தடுமாறும் நேரம் கரிசனையோடு ஒளியாவார் தனிமையில் தவிக்கும் போதினிலே நம்பிக்கையூட்டி நலம் தருவார் வாழ்விக்கும் நல்லாயனாய் வல்லமையோடு நடத்திடுவார் |