Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  313-உன் திரு வீணையில்  



உன் திரு வீணையில் - என்னை
ஒரு நரம்பென இறைவா ஏற்றிடுவீர்
சுகராகம் மீட்டிடுவீர்

தூசு படிந்த நரம்பு - என்று
என்னை வெறுத்து விடாதீர்
மாசு நிறைந்த மனிதன் என்று - உம்
உறவை நிறுத்தி விடாதீர் (2)
என் இயேசுவே என் தெய்வமே
என்னோடு நீ பேச வேண்டும் - உம்
வார்;த்தையில் தினம் நானும்
உயிர் வாழ வேண்டும்
இறைவா இறைவா இறைவா இறைவா - 2

தீராத சோகத்தில் நான் மூழ்கும் - போது
சுமை தாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் - போது
இடி தாங்கி நீதானையா (2)
என் தலைவா என் துணைவா - என்
தனிமை நீ நீக்க வேண்டும் - உம்
பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும்
இறைவா இறைவா இறைவா இறைவா 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்