தியானப் பாடல்கள் | 312-உன் நாமம் சொல்லச்சொல்ல |
உன் நாமம் சொல்லச் சொல்ல என் நெஞ்சம் மகிழுமையா என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுமையா மாணிக்கத் தேரோடும் காணிக்கை வந்தாலும் உனக்கது ஈடாகுமா உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன் உன் நாமம் என்னவென்பேன் இறையென்பேன் நிறையென்பேன் நீங்காத நினைவென்பேன் உன் நாமம் என்னவென்பேன் |