தியானப் பாடல்கள் | 310-உன் கரத்தோடு என் கரம் |
உன் கரத்தோடு என் கரம் சேர்த்து ஒவ்வொரு நாளும் நடந்திடுவேன் உன் விழியாலே உலகைப் பார்த்து ஒவ்வொரு நாளும் வளர்ந்திடுவேன் இயேசுவே தலைவா மன்னவா முதல்வா உன் ஒளியாலே மலர்ந்திடுவேன் - 2 மழலை மலர்கள் உனது மடியில் மகிழ்ந்து ஆடிட நான் காண்பேன் வளர்ந்த பிறகும் குழந்தை உள்ளம் வேண்டுமென்றே வரம் கேட்பேன் - 2 உன் ஒளியாலே மலர்ந்திடுவேன் வயல் வெளி மலர் அழகின் ஒளியில் வள்ளல் தந்தையை நான் காண்பேன் தயவு மிகுந்த தந்தையை நம்பி பயமில்லாமல் நான் நடப்பேன் - 2 உன் ஒளியாலே மலர்ந்திடுவேன் கதறும் விதவை கண்ணீர் கண்டு கலங்கும் உந்தன் முகம் பார்ப்பேன் சிதைந்த இதயங்கள் சிந்தும் கண்ணீர் சிந்தையில் விழ சிலிர்த்திடுவேன் - 2 உன் ஒளியாலே மலர்ந்திடுவேன் |