Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  308-உன் இதயம் ஒரு பள்ளிக்கூடம்  

உன் இதயம் ஒரு பள்ளிக்கூடம் - அதில்
என் இதயம் ஒரு மாணாக்கன் இயேசுவே

தாழ்ச்சி என்பதே முதல் பாடம்
அதில் வளர்ச்சி காண்பதே மனப்பாடம்
சாந்தம் கொள்வதே வீட்டுப் பாடம்
அதில் சாந்தி காண்பதே வெற்றியாகும்

அன்பு என்பதே எழுத்தாகும்
பிறர்க்கன்பு செய்வதே சொல்லாகும்
பகையை மறப்பதே பொருளாகும்
இறை பாசம் வளர்ப்பதே நயமாகும்

வாய்மை என்பதே எண்ணாகும்
உடல் மெய்மை இருப்பதே கணக்காகும்
நேர்மை வளர்ப்பதே வழியாகும்
மனத்தூய்மை நிலைப்பதே விடையாகும்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்