தியானப் பாடல்கள் | 204-உரு தந்து உயிர் தந்து |
உரு தந்து உயிர் தந்து தினம் காப்பவா நிழல் போல வாழ்வெல்லாம் - எனைத் தொடர்ந்து வா (2) எப்போதும் உன் நினைவென சொல்லும் உன் விழிகள் எனதன்பு பரந்ததென சொல்லும் உன் கரங்கள் (2) உன்னோடு நடப்பது நான் என சொல்லும் உன் கால்கள் (2) என் குரல் உன் எதிர்பார்ப்பு சொல்லும் உன் செவிகள் (2) எளியோர்க்கு நற்செய்தி சொல்லும் உன் மொழிகள் நலிந்தோரை தினம்நாடிச் செல்லும் உன் வழிகள் (2) உன் வார்த்தை என் வாழ்வில் தரமான நல் விதைகள் (2) ஒன்றல்ல நூறாக தருவோமே கனிகள் (2) |