Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  303-உயிருள்ள இறைவனில்  
உயிருள்ள இறைவனில் உறவினில்
இணைந்திட வருவீர் திருக்குலமே
நம்மை தாங்கும் தேவனவர் - நம்
நினைவாய் வாழ்கின்றவர்

நிலை தடுமாறுவோர் கால்கள் திடனடையும்
நீதி வழிதனில் நடந்திடுவார் - 2
தம்மை நம்புவோரின் சோர்வை நீக்கிடுவார்
சுகம் தந்து உயர்த்திடுவார் - 2
புதுசிறகினில் கழுகென பறந்து மகிழ்ந்திட
ஆற்றல் அளித்திடுவார் - 2

அன்பு கயிறுகளால் கட்டிக்காத்திடுவார்
அவர் கரங்களில் சரணடைவோம் - 2
பக்கம் சாய்ந்திடுவார் பசி நீக்கிடுவார்
இனி கவலைகள் நமக்கு இல்லை - 2
நம்மை அறிந்து அன்பு செய்ய ஏங்கும் நெஞ்சம் உண்டு
விரைந்திடு இறைகுலமே - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்