Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  302-உள்ளத்தின் ஆழத்தில்  
உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சந்தோசம் அதை
எண்ணும் போதெல்லாம் ஒரு சங்கீதம்
என் யேசுவே என் தெய்வமே
உன் வார்த்தையே என் வாழ்வையே
உனதாக அழைக்கின்றதே - 2

உள்ளத் கதவைத் திறந்து வைத்து
உந்தன் குரலைக் கேட்கின்றேன்
உனது இனிய மொழியும் எனிலே
நம்பிக்கை தீபங்கள் ஏற்றுதே
உன் வழி தொடரவே தயக்கமோ தடுக்குதே
தயக்கமும் நீங்கினால் தடைகளே இல்லை
அன்பே இறைவா அருளைப் பொழிவாயே

உந்தன் நினைவாலே உயிரை வளர்க்க
அன்பால் இதயம் துடிக்கணும்
மனித இதய காயங்கள் மறைய
என் வாழ்வே மருந்தாய் மாறணும்
நண்பர்கள் சூழவே சுயநலம் மறையணும்
உறவுகள் நிலைக்கவே தியாகத்தில் வளரணும்
அன்பே இறைவா அருளைப் பொழிவாயே




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்