Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  301-உலகில் வாழும் உயிர்களிலில்லை  

தொகையறா

நிஐமான தெய்வமே என் வாழ்வில் நீயே நிஐம் ஆஆ.ஆ

உலகில் வாழும் உயிர்களிலில்லை உன்னதம்
உயிரில் கலந்து உள்ளம் வாழும் நீயே நிஐம் - உன் (2)
குறையாத அன்பு உன் நிறைவான பண்பு
என் வாழ்வில் நிலையாகவே நீயே நிஐம் (4)
என் இறையே என் உறவே என் வாழ்விலே நீயே நிஐம் (4)

ம். ம். ம் .ம். ம். ம்
வலுவின்றி நான் இங்கு வாழ்கையிலே
உன் வலிமை என்னுள்ளில் நான் உணர்கின்றேன்
பிறர் காண குறையோடு நான் வீழ்கையில்
மனதார உன்னில் பெருமை கொள்வேன்
இறைவா உன் வல்லமை எனில் வாழுமே
நீர் எனக்கு தருகின்ற அருள் போதுமே
என் இறையே என் உறவே என் வாழ்விலே நீயே நிஐம் (4)

ஆதாயம் என்றென்றும் அனைத்தையுமே
உன் பொருட்டு இழப்பெனக் கருதுகின்றேன்
உனைக் குறித்த எந்தன் நாவரிகள்
அளவற்ற செல்வம் என உணர்கின்றேன்
உம்மை நானாக மாற்றிடுவீர்
உலகில் உள்ள சொத்து என கருதுகின்றேன்
என் இறையே என் உறவே என் வாழ்விலே நீயே நிஐம் (4)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்