Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  300-உம்மைப்போற்றி புகழுகிறோம்  

உம்மைப்போற்றி புகழுகிறோம்
உம்மை வாழ்த்தி வணங்குகிறோம்.
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
நன்றிகூறி மகிழுகின்றோம் -2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2

வல்லவரே நல்லவரே வானம்
வையம் படைத்தவரே -2
வாழ்வுதர வந்தவரே எம்மை - 2
வாழவைத்துக் காப்பவரே -2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2

நேற்றும் இன்றும் மாறாதவரே - நேசப்
பிதாவிலே வாழ்ந்தவரே
நேசம் காட்டவந்தவரே எம்மை
நேசித்து வாழ்பவரே -2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2

ஆதிமுதல் வாழ்பவரே - ஆதி
அந்தமில்லா இருப்பவரே -2
ஆடுமேய்க்க வந்தவரே - புதிய -2
ஆதாமாய் இருந்தவரே
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்