தியானப் பாடல்கள் | 299-உம்மைப் பற்றிக்கொள்ள |
உம்மைப் பற்றிக்கொள்ள வேண்டும் இயேசுவே - உம்மைத் தொடர்ந்திட வேண்டும் இயேசுவே (2) ஐயா என் மகளுக்கு உயிர் பிச்சை தாரும் - 2 என்று உம்மைப் பின்தொடர்ந்த பெண்மணியைப் போல நானும் அன்பே என் மகனே எங்கெல்லாம் தேட - 2 என்று உம்மை அள்ளிக் கொண்ட அன்னைமரி போல நானும் ராபீ நீர் செல்லும் இடம் நானும்கூட வருவேன் - 2 என்று குணம் அடைந்திட்ட குருடனைப் போல நானும் ஐயா உம் கருணைக்கு சிலுவைப் பரிசா - 2 என்று கண்ணீர் வடித்திட்ட பெண்களைப் போல நானும் |