தியானப் பாடல்கள் | 296-உம்திருயாழில் என் இறைவா |
உம் திருயாழில் என் இறைவா - பல பண்தரும் நரம்புண்டு என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில் இணைத்திடவேண்டும் இசையரசே யாழினை நீயும் மீட்டுகையில் இந்த ஏழையின் இதயம் துயில் கலையும் - 2 யாழிசை கேட்டு தனை மறந்து - உந்தன் ஏழிசையோடு இணைந்திடுமே - 2 (உம்திருயாழில்) விண்ணகச் சோலையின் மலர் எனவே திகழ் எண்ணிலாத் தாரகை உனக்குண்டு - 2 உன்னருட் பேரொளி நடுவினிலே - நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் - 2 (உம்திருயாழில்) உன் ஒளித்திருநாள் நடனமதைக்கண்டு என் சிறு இதயம் களிகூரும் மன்னவன் உன்முக ஒளிச்சிதறும் - எழில் புன்னகையோடெந்தன் வாழ்வினையும் - 2 (உம்திருயாழில்) |