Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  294-உந்தன் கைகளில் நான்  



உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்
தவழ்ந்தாட வேண்டும் செல்ல மலராய் - 2
எந்தன் உயிரே நான் உந்தன் நிழலில்
வளர்ந்தாக வேண்டும் வளர் பிறையாய்

பெற்றதாயின் அன்புக்கு மேலாகவே
வற்றாத அருளைப் பொழிந்தாயே - 2
உந்தன் கரத்தில் என்னை பொதிந்தாயே
என்னை முழுதும் நீ அறிந்தாயே !

இருள் நிறை பள்ளத்திலும் வீழ்ந்தாலுமே
அணைத்தென்னை தோள்மேல் சுமந்தாயே - 2
கருணையினைப் கற்றுத்தந்தாயே
உந்தன் வரத்தால் என்னை நிறைத்தாயே !



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்