Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  292-உண்மை இறைவா உன்னை  

உண்மை இறைவா உன்னைக் காணத் துடித்தேன்
உந்தன் உறவில் இன்று என்னை இணைத்தேன்
வல்லவன் உந்தன் பாதையில் நல்லது காணும் ஆசையில் (2)
எல்லை இல்லாத் தாகம் கொண்டு
வந்தேன் என்னைத் தந்தேன் இன்று

தாயன்பும் தந்தையன்பும் மேல் என்று நான் இருந்தேன்
நீ தரும் அன்பைக் கண்டால் இதுவே மேலென்பேன் - 2
எத்தனைகோடி மாந்தரும் என்னை விட்டு ஓடினும் - 2
இத்தரையில் எந்நாளும் என்னை
நித்தம் அன்பு செய்யும் நல்ல

நான் பெற்ற செல்வமெல்லாம் ஒருநாள் ஓடிவிடும்
நீ தரும் அன்பு ஒன்றே நிலையாய்க் கூடிவரும்
பட்டம் பதவி யாவும் என் பயணத்தில் மாறிவிடும் (2)
நித்தம் என்னைக் காக்கும் உந்தன்
அன்பு ஒன்றே மாறாதையா

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்