Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  291-உங்களுக்கு சமாதானம்  


உங்களுக்கு சமாதானம் - 2
உலகம் என்றுமே தரமுடியாத
சமாதானம் தருகின்றேன்
உங்களுக்கு சமாதானம் (2)

படைப்பிற்கெல்லாம் சமாதானம்
பகைவர்க்கெல்லாம் சமாதானம (2)
பரமன் தந்த சமாதானம் - நம்மை
பாரில் வாழவைக்கும் சமாதானம் (2)
சமாதானம் நமக்குச் சமாதானம் - 4

பிறமத சகோதரருக்கு சமாதானம்
பிறமொழி பேசுவோர்க்குச் சமாதானம் (2)
பிறஇன நண்பர்க்குச் சமாதானம் - நம்மை
பிரிந்து செல்பவர்க்கும் சமாதானம் (2)
சமாதானம் நமக்குச் சமாதானம் - 4


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்