தியானப் பாடல்கள் | 290-உங்களிடையே அப்படி |
உங்களிடையே அப்படி (இருக்கக் கூடாது - 2) - 2 பணம் பதவி சாதி மதம் அடிமை ஆண்டான் என்ற பேதம் உங்களிடையே என்றும் (இருக்கக் கூடாது - 2) பளுவான சுமையைக் கட்டி தோளினில் வைப்பார் தம்மை தலைவர்கள் என்பார் தன் விரலாலும் அசைத்துக் கூட பார்த்திடமாட்டார் (2) பண பலத்தால் பாமரரை அடக்கி ஆளுவார் - 2 தம்மை முதலாளி என்பார் - பணம் பதவிக்காக மனிதரையே (விலை பேசிடுவார் - 2) சாதி என்ற கொடுமையினால் மனிதரைப் பிரிப்பார் தம்மை உயர்ந்தவர் என்பார் ஏழை மனிதர்களை மிருகமாக நடத்திட செய்வார் (2) மதத்திற்காக மனிதனையே சூறையாடுவார் - 2 தம்மை கடவுள் என்பார் - கொடும் மதவெறியால் மனிதனையே (ஏமாற்றிடுவார் - 2) |