தியானப் பாடல்கள் | 289-உங்கள் கடவுள் எங்க |
உங்கள் கடவுள் எங்கே என்று உலகம் கேட்குது உன்னை இன்று தனிவாழ்வில் என்னை வெளியே தள்ளிவிட்டாய் தன்னலம் ஒன்றே வாழ வழி என்றாய் தவித்திடும் ஏழை கண்ணீரைத் துடைக்கவில்லை தனி வாழ்வில் கொன்று என்னை புதைத்து விட்டாய் - அதனால் உழைப்பினிலே என்னை வெளியே விரட்டிவிட்டாய் ஊதியம் ஒன்றே போதும் என்று கொண்டாய் உண்மை நீதி நேர்மை விலைக்கு விற்றாய் உழைப்பினிலே கொன்று என்னைப் புதைத்துவிட்டாய் - அதனால் மணவாழ்வில் என்னை வெளியே துரத்திவிட்டாய் மனம் போகும் வழியில் விரைந்து சென்றுவிட்டாய் மணம் தரும் தூய்மை தாய்மை தொல்லை என்றாய் மணவாழ்வில் கொன்று என்னை புதைத்துவிட்டாய் - அதனால் |