தியானப் பாடல்கள் | 288-இன்பக் கனாவொன்று |
இன்பக் கனாவொன்று நான் கண்டேன் இறை ஆட்சி மலரக் கண்டேன் எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் - இறை அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் பிறர்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் பிறர் நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் எந்தன் வாழ்வின் பொருளை அறிந்தேன் அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் - அகச் சுதந்திரமே எங்கும் ஒலியெனக் கண்டு கொண்டேன் நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன் நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன் அன்பில் நிறைவைக் கண்டேன் |