தியானப் பாடல்கள் | 287-இமைப்பொழுதேனும் மறவாத |
இமைப்பொழுதேனும் மறவாத தெய்வமே இனி ஒருபோதும் மறவோம் உம்மையே காலமெல்லாம் கருணையோடு காப்பவரே களிப்பினால் மகிழ்ந்து நிதம் பாடுகின்றோம் தாயாக நீர் வந்து தனியொரு பிள்ளைக்கு தருகின்ற அன்பைச் சொல்லவா தந்தையாய் உடனிருந்து கரம் பற்றி நடந்திடும் தளராத பண்பைச் சொல்லவா எதைச் சொன்னாலும் தகுமோ இறைவா எல்லையில்லாத உம் அன்பே பெரிதல்லவா ஆயிரம் குறைகள் எமக்கிருந்தபோதும் அணைத்துக் காப்பதைச் சொல்லவா ஆனந்த மழையில் நனைந்திடவைத்து ஆயனாய் இருப்பதைச் சொல்லவா எதுவந்தாலும் உடன் வரும் சொந்தமே எந்தப் பொழுதும் உம்நினைவே நிறைவாகுமே |