Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  286-இறைவனைப் புகழ்கின்றதே  

இறைவனைப் புகழ்கின்றதே - என் ஆன்மா
மீட்பராம் கடவுளில் மகிழ்கின்றதே
இறைவனைப் புகழ்கின்றதே

அவரது கடைக்கண் பார்வை ஒன்றே
அடிமை என்னை உயர்த்தியது
அகிலம் போற்றும் அருஞ் செயல் செய்து
தலைமுறை எல்லாம் போற்றிடச் செய்த
வல்ல தேவன் பரிசுத்தரே

ஆண்டவர் தமது வலிமையைக் காட்டுவார்
செருக்கு கொண்டோரை சிதறடிப்பார்
அரியணை நின்று வலியோரை அகற்றி
செல்வரை வெறுங்கையாய் அனுப்பிடுவார் - அந்த
வல்ல தேவன் பரிசுத்தரே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்