Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  285-இறைவனே நீரே எனது  



இறைவனே நீரே எனது வாழ்வின் உறைவிடம்
இறைவனே நீரே எனது மீட்பின் கேடயம்

பலரும் எனது அழிவை விரும்பினும்
பாதுகாக்கும் அரணும் நீரன்றோ
நம்பினேன் இறையுனை நம்பினேன்
பயப்படேன் இனி என்றும் பயப்படேன்

இறைவன் எனது செபத்தைக் கேட்டதால்
என்றும் நானும் மகிழ்ந்திருப்பேனே
பாடுவேன் அவர் புகழ் பாடுவேன்
நாடுவேன் அவர் பதம் நாடுவேன்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்