தியானப் பாடல்கள் | 282-இறைவா நீ ஒரு சங்கீதம் |
இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் உன் கரம் தவழும் திரு யாழிசை அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய் பாவியென் நெஞ்சமும் துயில்கலையும் புது பாடலால் உன்னகம் இணைந்திடுமே எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில் எனை இன்று திரியாக ஏற்பாயோ இறைவா கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் நீ தோளினில் சுமந்து தினம் கடந்தாய் - 2 நாதா உன் வார்த்தைகள் வானமுதம் இனி நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம் ஒரு நாவு போதாது தேவா உன் பெயர் சொல்ல ஒரு நாளும் வற்றாது உனதன்பு கடலிங்கு ஒரு வார்த்தை சொன்னாலே என் பார்வை ஒரு நாளும் அழியாத உறவாகும் எழிவாகும் இறiவா |