Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  271280-இறைவா எனக்கொரு ஆசை  

இறைவா எனக்கொரு ஆசை - 2
உனை முகமுகமாய் நான் தரிசிக்கணும்
உன் திருப்பதமே நிதம் அமர்ந்திடணும்

அதிகாலைத் துளி விழும் போது
உன் முகம் தெரிந்திட வேண்டும்
எழுந்து நான் நடந்திடும் போது
உன் கரம் பிடித்திட வேண்டும்
வீதியில் வலம் வரும் போது - உன்
துணை உணர்ந்திட வேண்டும் (2)
தனிமையில் நான் வாடும் போது
நண்பனாய் அருகில் வேண்டும்
என் ஆசை ஆசை ஆசை நீயே இறைவா
என் ஆசை ஆசை ஆசை உன்னில்லம் தலைவா (2)

கேள்விகள் எனில் எழும் போது
பதில்களை நீ தரவேண்டும்
தவறுகள் செய்திடும் போது
மன்னிப்பு வழங்கிட வேண்டும்
நம்பிக்கை தளர்கின்ற போது
நெஞ்சுரம் நீ தரவேண்டும் (2)
வாழ்க்கையின் அசைவினில் எல்லாம்
உன் அருள் பொழிந்திட வேண்டும்
என் ஆசை ஆசை...


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்