தியானப் பாடல்கள் | 279- இறைவா உந்தன் அருளொன்றே |
இறைவா உந்தன் அருளொன்றே ஆனந்தமே நிறைவாய் உன்னில் என்வாழ்வு மலர்ந்திடுமே உந்தன் உறவின் நினைவினிலே எந்தன் இதயம் மகிழ்ந்திடுமே என்றும் உம் பிள்ளையாய் வாழவே (2) வார்த்தையின் வடிவினில் வந்திட்ட தேவா வானக வழிநீயே எனை ஆளும் நாதா (2) உம் திருக்கரம் பற்றி கரைசேரவே... என் மனம் மாறி உன் வழி வாழவே (2) உலகினை உதறி ஊனுடல் களைந்து உளம் நிறை சந்தத்தில் சங்கமமாகிட ஏங்குகிறேன் புண்ணிய வழியினை காட்டிய தேவா புனிதர் தம் வாழ்வை ஏற்ற எம் நாதா (2) உன் அன்பில் ஒன்றென கலந்திடவே என் வாழ்வு உன் வாழ்வாய் மாறிடவே (2) மாயையை களைந்து மனிதனாய் வாழ உந்தன் கருணையின் கரங்களில் தவழ்ந்திட ஏங்குகிறேன் |