தியானப் பாடல்கள் | 277-இறைவா உன் ஆவி |
இறைவா உன் ஆவி என்மீது தங்கும் ஒருநாள் என் வாழ்வில் திருநாளே எனக்காக வாழ்ந்த வெறும் நாட்கள் போதும் பணிக்காக என்னைப் பயன்படுத்தும் வருகின்றேன் ஆண்டவரே வழி நடத்தும் உன் ஆவியிலே வாழ்வின் பொருளே நீதாமே எளியோர்க்கு நற்செய்தி வழங்கிடவும் விடுதலை வாழ்வினை முழங்கிடவும் - புது பார்வை மனிதர் அடைந்திடவும் அடிமைத் தளைகள் உடைந்திடவும் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும் ஆண்டவர் திருவுளம் நிலை நிற்கவும் பகிராத செல்வத்தில் பயன் இல்லையே அழியாத மண் வாழ்வில் பொருள் இல்லையே பிறர் வாட நான் வாழ்தல் இழிவாகுமே அன்பிற்காய் அழிந்தாலும் நிறைவாகுமே உன் வழி நானும் செல்கின்றேன் உன் நினைவாக செய்கின்றேன் |