Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  276-இறைவா உன் அன்பு நிறைவான அன்பு  

இறைவா உன் அன்பு நிறைவான அன்பு
உறவாக உணவாக வழங்கிய அன்பு
தன்னிகரில்லா தலைவனின் அன்பு
மனிதத்தைப் புனிதமாய் மாற்றிடும் அன்பு

எல்லாம் இறை அன்பே எதிலும் நிறை அன்பே
வாழ்வாக வழியாக ஒளியாக வந்த தெய்வமே - என் -

பாலை நிலப் பயணத்திலே - வான்
மன்னாவைப் பொழிந்த அன்பு
பகலிலும் இரவிலுமே....எந்தக்
குறையின்றிக் காத்த அன்பு

தாய்வயிற்றில் தோன்றுமுன்னே - என்னை
கருவாக அறிந்த அன்பு
சிறுபிள்ளை என்னையுமே - இறை
வாக்குரைக்கப் பணித்த அன்பு

உலகோரை வாழவைக்கும் - இயேசு
நிலை வாழ்வை வழங்கும் அன்பு
உயிர்மீண்டு எழும்பச் செய்யும் - இது
ஒன்றேதான் பேரன்பு


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்