Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  272-இறைவன் கரங்கள் இசைக்கும்  

இறைவன் கரங்கள் இசைக்கும் ஸ்வரங்கள்
இனிய யாழிதழ் நான்
பரமன் தோட்டத்தில் புதுமை பொங்க
பூத்த சிறுமலர் நான் (2)

வரங்கள் கோடி வழங்கி - நாளும்
வாழ வைப்பவராம்
குறைகள் கோடி மறைந்து - போக
நிறைவு தந்தவராம் (2)
என் அன்பு தேவன் அவரே தான்
என் ஜீவராகமும் அவரே தான் (2)

புதையல் தேட புதியப் - பாதை
அழைத்து வந்தவராம்
கால்கள் சோர்ந்து களைத்த - நேரம்
தோள்கள் சுமந்தவராம் (2)
என் அன்பு தேவன் அவரே தான்
என் ஜீவராகமும் அவரே தான் (2)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்