Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  270-இறை சமூகமாய் நாங்கள்  


இறை சமூகமாய் நாங்கள் வாழவே
இறைவா இறைவா உந்தன் அருள் புரிவாயே

அன்பினைக் கொண்டு பகைமையை வென்று
பண்புடனே நாங்கள் வாழ்ந்திடவே
அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு
அன்புறவில் நாங்கள் வளர்ந்திடவே

நிறைகுறையோடு பிறரையும் ஏற்று
நிறைமகிழ்வை வாழ்வில் வழங்கிடவே
இயேசுவின் வழியில் இலட்சியப் பணியில்
இணைந்திருந்து நாங்கள் செயல்படவே

இறையாட்சியில் நம்பிக்கை கொண்டு
இறைவாக்குப் பணியை யாம் தொடர்ந்திடவே
புது உலகமைக்க திடமுடன் உழைக்கும்
புதுபடைப்பாய் நாங்கள் செயல்படவே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்