Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  267-இயேசுநாதர் கூறுகிறார்  


இயேசுநாதர் கூறுகிறார் இதைக் கொஞ்சம் கேளுங்கள்
அவர் இதயத்தைத் திறந்து சொல்வதைக் கேட்டு
மனிதராய் வாழுங்கள் - 2

மாசறு பொன் மனம் படைத்தவன் தானே
உலகின் முழு மனிதன் - புவி
மாந்தருக்காக தியாகங்கள் செய்பவன்
மனிதருள் அவன் புனிதன் - 2

ஆசையை வென்றவன் அகிலத்தை வென்றவன்
ஆவான் இது உண்மை நல்
ஆமைதியைக் கெடுக்கும் மனச்சுமைகளால்தானே
ஆயிரம் வரும் நன்மை 2

நாள்தொழும்பொது பொய்யுரை சொல்வது
அழிவுக்கு வகை கோலும்
செய்நன்றி மறப்பதும் நட்பைப் பகைப்பதும்
பாவத்தின் சுமையாகும்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்