Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  264-இயேசுவே உன் வார்த்தை  

இயேசுவே உன் வார்த்தை ஒன்றே (ஆறுதல் - 2)
பேசுமே என் வாழ்க்கை காணும் (தேறுதல் - 2)
பாசமே உன் நாமம் வாழ்வின் (ஆனந்தம் - 2)
நேசமே உன் பார்வை நாளும் (பேரின்பம் - 2)
ஆசையாய் நான் பாடுவேன் புது கீர்த்தனம் - 2
துதிகளின் தேவனின் திருப்பெயர்
பாடிப் புகழ்வோம் மானிடரே
நல்லவர் தேவனின் வல்லமை
பாடிப் புகழ்வோம் மானிடரே
ஆறுதல் தேறுதல் இயேசுவே உன் வார்;த்தை

வாய்மையும் நேர்மையும் எனக்கரணாகும்
என்னோடு நீயிருக்க (2)
வாழ்விலும் தாழ்விலும் நம்பிக்கையாலும்
உன்னோடு நான் நடக்க (2)
ஆழ்கடல் கடந்தேன் பாழ்வெளி நடந்தேன்
தோள்களில் சுமந்து சென்றீர் (2)
பேரிடர் நேரம் பெரு மழைக்காலம்
உயிரினைக் காத்து நின்றீர் - 2
ஆண்டவரே என் ஒளியாகும்
அவரே எனது மீட்பாகும் (2)
உயிருக்கு அடைக்கலம் அவரிருக்க
யாருக்கு அஞ்சி நான் நடுங்க வேண்டும் (2)

தீயோர் வளமுடன் வாழ்வதைக் கண்டு
தினம் மனம் வெதும்பமாட்டேன் (2)
காலடிச் சுவடுகள் கவனித்துக் கொள்வார்
கலக்கங்கள் கொள்ள மாட்டேன் (2)
நன்மைகள் நிறைத்து தீமைகள் தகர்த்து
புகலிடம் அளித்திடுவார் (2)
வாழ்வோரின் ஒளியில் கடவுளின் திருமுன்
நாள்தோறும் நடத்திடுவார் - 2
ஆண்டவரே என் ஒளியாகும்
அவரே எனது மீட்பாகும் (2)
உயிருக்கு அடைக்கலம் அவரிருக்க
யாருக்கு அஞ்சி நான் நடுங்க வேண்டும் (2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்