தியானப் பாடல்கள் | 263-இயேசுவே உன் அருகில் அமர |
இயேசுவே உன் அருகில் அமர நானும் வருகின்றேன் உண்மை ஒளியை உலகம் உணர உறுதியளிக்கின்றேன் (2) நீயின்றி ஓர் அணுவும் அசையாது இறைவா - உன் துணையின்றி வாழ்ந்தால் பொருளில்லை தலைவா நிதம் நீ வேண்டுமே என் உயிராகவே இறைவா இறைவா நீயின்றி வாழ்வில்லையே எளியோர்க்கு நற்செய்தி நானாகவும் அடிமை மக்கள் விடுதலை பெற்றிடவும் நலிவடைந்தோர் நல்வாழ்வு அடைந்திடவும் அமைதியற்றோர் அமைதியில் நிலைபெறவும் உன்னோடு உன்னில் என்றும் வாழ்ந்திடவும் உன் பணியை நான் என்றும் செய்திடவும் இறைவா நீ வேண்டும் - 2 வெற்றி பெற்ற மனிதரிலே நானும் மகிழவும் மனித மாண்பு என்றும் மலர நான் உழைக்கவும் பணிவிடைகள் பலனின்றி பணி செய்யவும் பலன் கருதா கடமை செய்து விருது கொள்ளவும் பொருள் தேடும் உலகில் உந்தன் அருள் தேடவும் ஏழை மனம் என் சுகமும் கண்டிடவும் இறைவா நீ வேண்டும் - 2 |