Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  262-இயேசுவே உயிர் ஆற்றலே  

இயேசுவே உயிர் ஆற்றலே
புவியை இயக்கும் புனிதன் நீ (2)
நேசமே நிறை பாசமே - என்னை
நடத்தும் துணைவன் நீ
வெறுமை விரட்டி தொடரும் போதும்
நிறைவு அமைதி அருள்பவன் நீ

இருளில் விழுந்து மடியும் பொழுது
அறிவொளி தரும் தந்தை நீ
துயரின் பிடியில் துவளும் நொடியில்
ஆறுதல் தரும் தாயும் நீ (2)
தனிமை போக்கும் உறவும் நீ
இனிமையாக்கும் இறையும் நீ (2)
மனதில் முளைக்கும் கவலைக் களையை
அகற்றும் அருளும் நீ

வாழ்வை மறுக்கும் தீமையை
விரைந்து ஒழிக்கும் வீரம் நீ
எளியோர் வாழ்வு புவியில் புலர
உழைத்து மகிழும் தியாகம் நீ (2)
நீதி கேட்கும் வன்மை நீ
நன்மை நாடும் தூய்மை நீ (2)
உண்மை எங்கும் மலர உதவும்
மக்கள் சக்தியும் நீ



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்