Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  260-இயேசுவே இத்தரணியெங்கும்  

இயேசுவே இத்தரணியெங்கும்
உன்னைக் காண்கின்றேன்
காணும் காட்சியில் எல்லாம்
உன் புன்னகை பார்க்கிறேன் (2)
செடியில் மலரில் சிரிப்பது நீ
விண்ணில் நிலவில் ஒளிர்வது நீ (2)
காண கண்கள் வாய்த்தால்
இங்கே எங்கும் நீ எதிலும் நீ

காலை நேரம் கீழைவானில்
வந்தனம் காண்கின்றேன்
மாலை ஆதவன் மறையும் வேளை
வதனம் பார்க்கிறேன் (2)
வானம் கறுத்து மேகம் திரண்டு
பொழிய உன்னன்பில் நனைகின்றேன் (2)
வானம் பாடி கானம் பாட
தென்றலில் உன்னை உணர்கிறேன் - 2

அன்பர் உருவில் அருகே வந்து
தொட்டு அணைக்கின்றாய்
அன்னை வடிவில் இன்னல் தீர்க்க
என்றென்றும் விளிக்கிறாய் (2)
நீதிக்காக நாளுமிங்கே
வாழ்வோர் நெஞ்சில் உயிர்க்கிறாய் (2)
பாதையில் அன்பு வார்த்தை கேட்டு
அன்பரின் கண்களில் சிரிக்கிறாய் - 2




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்