Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  259-இயேசுவின் பொன் மொழிகள்  

இயேசுவின் பொன் மொழிகள்
எந்தன் இதயத்தில் பாய்ந்ததம்மா - அவர்
ஆற்றிய அரும்பணிகள்
நெஞ்சில் அக்கினி மூட்டுதம்மா

பகைவரை நேசி என்றார் - நெஞ்சில்
பாசத்தை வளர்த்திரு என்றார்
இறைவனை நினைத்திரு என்றார் - நெஞ்சில்
இரக்கத்தை வைத்திரு என்றார்

பசித்தவர்க்கு உணவு அளித்தார் - நெஞ்சில்
பரிவுடன் உயிர் அளித்தார்
இறைவனை நினைத்திரென்றார் - நெஞ்சில்
இரக்கத்தை வைத்திரு என்றார்

இறைவனில் விழித்திரு என்றார் - துன்பம்
வருகையில் பொறுத்திரு என்றார்
தூய்மையில் நிலைத்திரென்றார் - துயர்
துடைப்பதில் களித்திரென்றார்

உண்மைக்குச் சாட்சி சொன்னார் - பல
நன்மைகள் நாடி நின்றார்
உயிருக்கு உயிர் கொடுத்தார் - எந்தன்
உள்ளத்தில் நிறைந்திருப்பார்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்