Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  258-இயேசுவின் திருநாம கீதம்  

இயேசுவின் திருநாம கீதம்
என் நெஞ்சிலே எந்நாளுமே
சங்காக முழங்கிட வேண்டும் - 2

நான் பாடும் பாடல் நானிலம் எங்கும்
எதிரொலித்திட வேண்டும் ஆ ஆ ஆ - 2
உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
உணர்வு பெற வேண்டும் உவகை பெற வேண்டும் - 2

பல கோடி புதுமைகள் செய்தது யேசுவின்
இணையில்லாத் திருநாமம் ஆ ஆ ஆ - 2
வாழ வைப்பதும் வாழ்விக்கப் போவதும்
அருள் தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம் - 2

நல் வானும் மண்ணும் அதில் நிறை யாவும்
ஒரு மொழி பேசிடணும் ஆ ஆ ஆ - 2
வழியாய் வாழ்வோர் இயேசுவின் நாம
மொழிதான் கேட்டிடணும் ஜெகமதில் ஒலித்திடணும் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்