Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  255-இயேசு நம் ஆண்டவர் உலகில் வந்தார்  

இயேசு நம் ஆண்டவர் உலகில் வந்தார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக - 2
எல்லாமும் நமக்குத் தர வந்தார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக - 2

ஆயனில்லா ஆடுகளை பசும் புல்லில் மேயவைப்பார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக
ஆற்றோரம் அழைத்துச் சென்று தாகம் தணியவைப்பார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக
வழி தவறிய ஆடுகளை தேடி அலைகின்றார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக
இரவில் விழித்து பகலில் நடத்தி அன்பாய்க் காக்கின்றார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக - 4

ஊமைகளைப் பேசவைத்தார் முடவரை நடக்கச் செய்தார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக
உளம் நொந்து அழுவோர்க்கு ஆறுதல் தருகின்றார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக
சுமை சுமக்கின்ற நம் சுமையை தானே சுமக்கின்றார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக
உயிரைக் கொடுத்து உலகோர் நம்மை அன்பாய்க் காக்கின்றார்
அன்புக்காக எல்லாம் அன்புக்காக 4


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்