Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  252-இயேசு என்னை (அன்பு செய்கின்றார் - 2)  

இயேசு என்னை (அன்பு செய்கின்றார் - 2)
அளவில்லாமல் (ஆசீர் அருள்கின்றார் - 2)
இனி துன்பம் ஏதும் இல்லை
ஒரு துயரம் வாழ்வில் இல்லை

தனிமை என்னும் பாழ்வெளி - என்னைத்
தவிக்க வைத்ததுவே
தவறு செய்த நேரத்தில் - மனம்
பதறித் துடித்ததுவே (2)
இனியும் வாழ்வு கிடைக்குமா - என்று
கலங்கித் தவித்து நின்றேன்
இதயம் தேடும் தலைவனே - நான்
காணத் துடிக்கின்றேன்
தாயைப் போல தேடி வந்து - என்னை
அணைத்தாரே தழுவி அணைத்தாரே

உறவுகள் என்னை வெறுத்த போது - உள்ளம்
கலங்கி நின்றேன்
உண்மைக்காக உழைத்த நேரம் - உறவில்
தேடி வந்தேன் (2)
என்றும் மாறா இறைவனை - நான்
காண வேண்டி நின்றேன்
ஏழை வாழ்வில் ஏற்றம் காண - ஏங்கிக்
காத்து நின்றேன்
இரக்கம் பொழியும் இறைவன் - என்னைத்
தேடி வந்தாரே அன்பைப் பொழிந்தாரே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்