Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  251-இயேசு என்னும் நாமம்  

இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வு கொண்டது - அதை
ஏழிசையில் பாடுகின்றது

நான் மீட்பளிக்கும் மகிழ்வு கண்டேன்
வான் வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன்
பெற்ற பெரும் வாழ்வைப்
பகிர்ந்து கொள்க என்று
பேசியவர் அனுப்பி வைத்தார் - தம்
ஆவியவர் உயிரும் தந்தார்

என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லமதை அங்கு கண்டார் - 2
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் - ஒரே
சோதரராய் சூழ்ந்திருப்போம்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்