Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  249-இயற்கையின் அதிசயம்  

இயற்கையின் அதிசயம் - அது
இறைவனின் கலைநயம்
உலகொரு ஓவியம் - நாம்
அபிநயக் காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள்

தூரத்து மேகக் கூட்டங்கள்
தூறல் போட்டுப் பாடுங்கள்
தாகம் கொண்ட ஓடங்கள்
தாளம் போட்டு வாருங்கள்
விந்தைகள் செய்யும் இறைவனின் அருளை
    சிந்தையில் ஏற்றித் தினம் தொழுவோம்
    கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம்
    கடவுளின் கருணைக் காவியம்
    எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள்

கானத்துக் குயிலின் கீதங்கள்
காற்றில் தவழ்ந்து வாருங்கள்
பச்சை வண்ணச் சோலைகள்
பாட்டுப் பாடி வாருங்கள்
விந்தைகள் செய்யும் இறைவனின் அருளை.
    சிந்தையில் ஏற்றித் தினம் தொழுவோம்
    கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம்
    கடவுளின் கருணைக் காவியம்
    எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்