தியானப் பாடல்கள் | 248-இதோ இதோ உலகின் ஒளி |
இதோ இதோ உலகின் ஒளி இயேக்கிறீஸ்து எனும் ஞானஒளி (2) இவரே எந்தன் அன்பான மைந்தன் என்று முழங்குதே விண்ணொளி (2) இதோ இதோ உலகின் ஒளி இயேக்கிறீஸ்து எனும் ஞானஒளி வானம் திறந்தது வரங்களின் ஆவி இறங்கியதே பூமி குளிர்ந்தது யேசுவின் திருமுழுக்கலைகளிலே நியமங்கள் நிறைவேற நீதிதேவன் பணிந்தார் (2) புயங்களிலே பூவுலகை மீட்கும் பணி புரிந்தார் யோர்தான் நதிபோலே இந்தப் பார்தான் மகிழாதோ (2) நீரால் பிறந்தோமே நிலந்தனில் உழன்றோமே (2) ஆவியிலே பிறப்படைந்து அன்பாய் வாழ்வோமே இவர்கள் என் மக்கள் என்று தந்தை மகிழ்வாரே (2) |