தியானப் பாடல்கள் | 246-இதயமே இதயமே |
இதயமே இதயமே மெல்லத் திறந்து பேசும் இதயமே (2) செல்லப்பிள்ளை நான் கெஞ்சுகின்றேன் இயேசுவே ஒரு சொல் போதுமே உன் ஒரு சொல் போதுமே நிலைத்து வாழும் சொந்தமாய் நீ போதும் எந்தன் வாழ்வினில் பிரிந்து போய் மனம் வாடும் போது நீதான் எந்தன் ஆறுதல் எண்ணம் உலகை நாடும் போது உந்தன் கிருபை என்னைத் தாங்கும் எந்தன் வாழ்வு மலர்ந்திட ஒரு சொல் போதுமே இறைவா ஒரு சொல் போதுமே நினைவில் ஆடும் நிஜங்களாய் நீ வேண்டும் எந்தன் ஜீவனில் இருளிலே நான் வாடும் போது ஒளியாய் வா என் வாழ்விலே பாவம் என்னைச் சூழும் போது பாதையாய் என் வாழ்வில் வா வா உன்னில் நானும் வாழ்ந்திட ஒரு சொல் போதுமே இறைவா ஒரு சொல் போதுமே |