தியானப் பாடல்கள் | 244-இதயத் துடிப்பில் |
இதயத் துடிப்பில் உணர்வேன் நீரே வாழ்வின் மையம் என்று சுவாசம் தோறும் உணர்வேன் வாழ்வு என்பது நீரே என்று (2) கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வம் உன்னையன்றி வேறில்லை ஆயன் போல வழியைக் காட்ட உன்னையன்றி வேறில்லை உனது அழைப்பில் ஓடிவந்தேன் சிறகை விரித்து அணைப்பாயே உனது கரத்தை இறுகப் பிடித்தேன் இடறல் தகர்த்து காப்பாயே - 2 அன்பு என்னும் அமுதம் ஊட்ட உன்னையன்றி வேறில்லை தனிமைத் துயரில் நண்பர் உறவாய் உன்னையன்றி வேறில்லை உனது கருணைப் பார்வை போதும் வாழ்வில் எல்லாம் கைகூடும் உனது இனிய வார்த்தை போதும் ஏங்கும் உள்ளம் நலம் பெறும் - 2 |